சின்னத்திரை படப்பிடிப்புகள் நடப்பதைப் போலவே சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க கோரிக்கை..!
படப்பிடிப்பு ரத்தால் கடந்த 6 மாதங்களில் தயாரிப்பாளர்கள் தவிர்த்த மற்ற திரைப்பட கலைஞர்களுக்கு மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக பெப்சி அமைப்பு கூறியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி இதனை தெரிவித்தார்.
கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை படப்பிடிப்புகள் நடப்பதைப் போலவே திரைப்பட படப்பிடிப்பு களுக்கும் அரசு அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 6 மாதங்களாக படப்பிடிப்பு நடத்தப்படாததால் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
அக்டோபர் மாதம் முதல் திரையரங்குகளை திறக்க அரசிடம் கோரிக்கை கொள்கை இருப்பதாகவும் செல்வமணி தெரிவித்தார். ஓடிடி போன்ற வளர்ச்சியை தடுக்க முடியாது எனக் கூறியவர் திரையரங்கு ஓடிடி தொலைக்காட்சி ஒன்றையொன்று பாதிக்காமல் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.







