--- --:--:-- --

“நாடு முழுவதும் செப்.30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!!” புதிய தளர்வுகள் அன்லாக் 4.0 என்னென்ன? மத்திய அரசு அறிவிப்பு!!

tfgwt

நாடு முழுவதும் 8 வது கட்டமாக ஊரடங்கை செப்டம்பர் 30-ந் தேதி வரை மேலும் ஒரு வாரம் நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஊரடங்கில் புதிய தளர்வுகள் குறித்தும் மத்திய உள்துறை அமைச்சகம் பட்டியல் வெளியிட்டுள்ளது.

 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தியது. 5 மாதங்களாக தொடர்ந்து 7 முறை ஊரடங்கு நீடிக்கப்பட்டு ஊரடங்கில் அவ்வப்போது புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. இம்மாதம் 31-ந் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஒரு மாதத்திற்கு (செப்டம்பர் 30-ந் தேதி வரை) ஊரடங்கை நீடித்து மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.

 

அத்துடன் புதிய தளர்வுகள் பட்டியலையும் அறிவித்துள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

 

பள்ளி, கல்லூரிகள் செப்.30ஆம் தேதி மூடப்பட்டிருக்கும்.

 

மெட்ரோ ரயில் சேவை செப்.7-ந் தேதி முதல் தொடங்கும்.

 

திறந்த வெளி திரையரங்கங்கள் செப்.21-ந் தேதி முதல் செயல்படும்.

 

மாநிலத்திற்கு உள்ளே மக்கள் சென்று வருவதற்கு மாநில அரசுகள் எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது .

மாநிலங்களுக்குள் மக்கள் சென்று வர இ-பாஸ் உள்ளிட்ட எந்த நிபந்தனையும் விதிக்க கூடாது

கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் மத்திய அரசிடம் கலந்தாலோசிக்காமல் மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தக்கூடாது.

 

செப்டம்பர் 21முதல் அரசியல், மதம், கலாச்சாரம், பொழுதுபோக்கு, விளையாட்டு, சமூகம் சார்ந்த நிகழ்வுகளை 100 பேருக்கு மிகாமல் நடத்திக்கொள்ளலாம்.

 

9ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பெற்றோர் சம்மதித்தால் பள்ளிக்கு வந்து ஆசிரியரிடம் ஆலோசனைகள் பெறலாம் என்பது போன்ற தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon