--- --:--:-- --

அரியலூரில் பெண்ணின் குடலை பிறப்புறுப்பு வழியாக வெளியே எடுத்து கொடூர கொலை..!

23

ரியலூர் அருகே பெண்ணின் குடலை வெளியே எடுத்து கொடூரமான முறையில் கொலை செய்த நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கீழப்ப நல்லூரை சேர்ந்த மலர்கொடி கணவன் உயிரிழந்த நிலையில் மகனுடன் வசித்து வந்துள்ளார்.

 

நேற்றிரவு மகன் கலைவாணன் திருச்சிக்கு காய்கறி வண்டி ஓட்டி சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த மலர்கொடி வீட்டுக்கு முன் பகுதியில் பிறப்புறுப்பு வழியே குடலை எடுத்து கொடூரமாக கொல்லப்பட்ட கிடந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

 

உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பினர். மலர்கொடிக்கும், மாட்டு வியாபாரி சரவண வேலுவுக்கும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்பு இருந்ததாக கூறப்படும் நிலையில், அவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Leave a Reply

Right Menu Icon