காதலில் சலிப்பு ஏற்படும் போது தானும் நயன்தாராவும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம்..!
காதலில் சலிப்பு ஏற்படும் போது தானும் நயன்தாராவும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். நானும் ரவுடிதான், தானே சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன்.
இவருக்கும், நடிகை நயன்தாராவுக்கும் நானும் ரவுடிதான் படத்தின் போது காதல் உருவானது. இந்நிலையில் காதல் வாழ்க்கை சிறப்பாக இருப்பதாகவும் காதலில் சலிப்பு ஏற்படும்போது திருமணம் செய்து கொள்வோம் எனவும் விக்னேஷ் சிவன் தெரிவித்திருக்கிறார்.
மேலும் தங்கள் வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறுவதற்கு இன்னும் கடினமான உழைப்பை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.







