தமிழகத்தில் 11 ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடக்கம்..!
தமிழகத்தில் அரசு பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளிலும் 11 ஆம் வகுப்புக்கான சேர்க்கை இன்று தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கியது.
இந்நிலையில் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் பதினொன்றாம் வகுப்புக்கான சேர்க்கை இன்று தொடங்குகிறது. மாணவர் சேர்க்கையின்போது அதே பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் மதிப்பெண்ணை காரணம் காட்டி சேர்க்கையை மறுக்கக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இட ஒதுக்கீடு பாதுகாப்பு வழிமுறைகள் போன்ற பல்வேறு அறிவுறுத்தலை கடைபிடிக்குமாறு மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை கூறியுள்ளது.






