தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசிக்க தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது..!
சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி வியூகம், கட்சி வளர்ச்சிப் பணி உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்க தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
பாஜக மாநில தலைவர் வேல்முருகன் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அந்த கட்சியின் மாநில செயற்குழு கூடுகிறது. காணொளி வாயிலாக நடைபெறும் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா சிறப்புரையாற்றுகிறார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. யார் தலைமையில் கூட்டணி என அண்மையில் பாஜக – அதிமுக இடையே பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன.
இந்த நிலையில் மாநில செயற்குழு கூட்டத்தில் தேர்தல் வியூகங்கள் குறித்தும் கட்சி உறுப்பினர் சேர்க்கை பற்றிய முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.






