கணவனுடனான குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படும் நிகழ்வில் சாவில் மர்மம் உள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசநட்டியை சேர்ந்த விக்னேஷ், திம்மா புரத்தை சேர்ந்த டில்லி குமாரியை இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார்.
கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு எழும் நிலையில் நேற்று டில்லி குமாரி தூக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் கணவரும், குடும்பத்தினரும் கொலை செய்துள்ளதாக டில்லி குமாரியின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ள நிலையில் ஓசூர் கோட்டாட்சியர் விசாரித்து வருகிறார்.







