--- --:--:-- --

விநாயகர் சதுர்த்தியை மக்கள் அனைவரும் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பு..!

8

ரும் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

 

இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மத்திய அரசின் வழிகாட்டுதல் படியும், கொரொனா சூழலை கருத்தில் கொண்டும் தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கிலும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவதையும், ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைப்பதையும் பொதுமக்களின் நலன் கருதி தடை செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக தாக்கலான அனைத்து மனுக்களிலும் அரசின் ஆணையை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளதையும் தமிழக அரசு எடுத்துக் காட்டியுள்ளது.

 

தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மதம் சார்ந்த விழாக்கள், கூட்டு வழிபாடுகள் ஆகியன நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தடை செய்யப்பட்டுள்ளதை தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

 

எனவே மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மக்கள் அவரவர் வீடுகளில் இருந்தவாறே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon