--- --:--:-- --

பள்ளிகள் திறக்கப்படும் வரை மாணவ, மாணவியருக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு..!

3

மிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் வரை மாணவ, மாணவியருக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொது முடக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் நலன் கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்தி குறிப்பில் பள்ளிகள் திறக்கப்படும் வரை மாணவ, மாணவியருக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

 

குறிப்பாக பள்ளி வேலை நாட்களில் மட்டும் உலர் உணவுப்பொருட்களை தொடக்கப்பள்ளி மற்றும் உயர் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

சத்துணவுத் திட்டத்தின் கீழ் அரிசியுடன் புரதச் சத்தை அதிகரிக்க பருப்பும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் வழக்கமாக வழங்கப்படும் பருப்புடன் சேர்த்து கூடுதலாக 15 கிராம் பருப்பு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon