பணத் தகராறில் நண்பனை கொலை செய்த சக நண்பர்கள்..!
கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் நண்பர்கள் ஐந்து பேர் சேர்ந்து சக நண்பனை கத்தி அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். புது நகரை சேர்ந்த காமராஜ் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை பத்தாயிரம் ரூபாய்க்கு அடமானம் வைத்து தருமாறு நண்பர்களிடம் கேட்டு உள்ளார்.
30,000 ரூபாய்க்கு அடமானம் வைத்த நண்பர்கள் பத்தாயிரம் ரூபாயை மட்டும் அவரிடம் கொடுத்துவிட்டு மீதி தொகையை செலவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த விபரம் காமராஜுக்கு தெரிய வந்து கேட்டபோது சமாதானம் செய்துகொள்ளலாம் என அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது அனைவரும் மது அருந்திய நிலையில் தேவா என்பவரின் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து காமராஜ் வீட்டிற்கு புறப்பட்டார். ஜேஜே நகரில் வைத்து மற்ற 5 நண்பர்களும் பைக்கில் வேகமாக வந்து காமராஜை மறித்தனர்.
பின்னர் காமராஜை தாக்கி தங்களது மோட்டார் சைக்கிளில் ஒரு குப்பை கிடங்கிற்கு தூக்கி சென்றனர். அங்கு ஐந்து பேரும் சேர்ந்து காமராஜை மார்பில் கத்தி, அரிவாளால் வெட்டியும், கழுத்தை அறுத்தும் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர்.







