மதுரையில் புளிய மரத்துக்கு விஷம் வைத்து கொலை..!
மதுரை அருகே புளியமரத்தில் விஷம் வைத்து கொலை செய்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த புளிய மரத்தில் துளையிட்டு அதற்கு விஷயம் வைத்ததாக கோட்டாட்சியரிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.
பட்டுப்போன இந்த மரத்தில் இருந்து அவ்வப்போது கிளைகள் முறிந்து சாலையில் விழுந்து வருவதாகவும் அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் முன் இந்த மரத்தை வெட்டி அகற்ற வேண்டும் எனவும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







