--- --:--:-- --

கடைக்காரரின் கவனத்தை திசை திருப்பி கல்லாவில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிய பெண்…!

4

துரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடிகர் வடிவேலு பாணியில் பூண்டு கடைக்காரரின் கவனத்தை திசைதிருப்பி கல்லாவில் இருந்த 2000 ரூபாய் பணத்தை திருடி சென்ற பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

 

அங்கு முருகன் என்பவர் நடத்தி வரும் பூண்டு மொத்த வியாபார கடையில் பெண் ஒருவர் வந்துள்ளார். திரைப்படமொன்றில் நகைச்சுவை நடிகர் வடிவேலு கேட்பதுபோல் பூண்டு வகைகள் அத்தனையும் தலா 25 கிலோ வேண்டும் எனக் கேட்டு ஒவ்வொன்றையும் ஆய்வு செய்வது போல் பாவனை செய்து உள்ளார்.

 

முருகன் அசர்ந்த நேரம் பார்த்து கல்லாவில் இருந்த இரண்டாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார். அந்த பெண்ணை உஷாராகி முருகன் துரத்தவே ஆடைகளை களைந்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

 

இவருக்கும் தகவலறிந்து வந்த போலீசாரிடம் அந்தப் பெண் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மதுரையை சேர்ந்த மீனாட்சி என்ற அந்த பெண்ணின் உள்ளாடையில் இருந்து 2,000 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

Leave a Reply

Right Menu Icon