--- --:--:-- --

கடலூரில் குட்காவை பதுக்கி வைத்து 4 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர்..!

6

கடலூரில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான குட்காவை பதுக்கியவர் கொரொனா காலத்தில் மட்டும் 4 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வாங்கிக் குவித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலூர் கேஎன் பேட்டை பகுதியில் பூட்டியிருந்த வீட்டில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

இதன் மதிப்பு ஒன்றரை கோடி ரூபாய் என்று கண்டறியப்பட்டது. கள்ளச் சந்தையில் சுமார் 4 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதில் முக்கிய குற்றவாளியான பாரதி என்பவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது கட்டுக்கட்டாக பணம் மற்றும் 100 சவரன் தங்க நகைகள் இருந்தது.

 

அது மட்டுமில்லாமல் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து ஆவணங்கள் இருந்துள்ளது. இதில் 4 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் கொரொனா காலத்தில் மட்டும் வாங்கியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக பாரதி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

அவர் சேர்த்துள்ள சொத்துக்கள் குறித்து வருமானவரித்துறை விசாரணை செய்ய பரிந்துரைக்க காவல் துறை திட்டமிட்டுள்ளது. மேலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் பாரதி மீது கிரிமினல் வழக்கு பதிந்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon