--- --:--:-- --

சத்தீஸ்கர் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கில் சிக்கி கொண்ட நபர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு..!

5

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் அருகே ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நி லையில் ஒரு மரத்தைப் பற்றிக் கொண்டு சிக்கித் தவித்த ஒருவரை விமானப்படை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டு உள்ளனர். சத்தீஸ்கரில் கனமழையால் கிட்டாகேட் அணை நிரம்பி வழிகிறது.

 

அணைப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் ஓர் இடத்தில் ஆற்றின் நடுவே உள்ள மரத்தில் இளைஞர் ஒருவர் சிக்கிக்கொண்டார். அவரை மீட்பதற்காக விமானப் படையியின் உதவி நாடப் பட்டது.

 

இதனையடுத்து விமானப்படையில் ஹெலிகாப்டரிலிருந்து அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். மீட்புப்பணி காட்சிகளை பிலாஸ்பூர் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon