சிறைக் காவலர்கள் தாக்கியதாகப் புகார்!
தேனி சிறையில் இருந்து தப்பிய நான்கு பேரின் உடல்நிலையை ஆய்வு செய்து, தேவைப்பட்டால் உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டது தொடர்பாக நவம்பர் 6-ஆம் தேதி காவல்துறை அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தனது இரு மகன்கள் மற்றும் அவர்களுடன் இருந்தவர்களைச் சிறைக் காவலர்கள் கடுமையாகத் தாக்கியதாகக் கூறி, ஆறுமுகத்தம்மாள் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




