பண்ணை கோழிகள் திடீர் உயிரிழப்பு – ஆய்வுகள் நடந்து வருவதாக அமைச்சர் கமலி தகவல்
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், தியாகவல்லி ஊராட்சிக்குட்பட்ட தம்மனாம்பேட்டை பகுதியில் கறிக்கோழிப் பண்ணைகளில் ஏற்பட்டுள்ள கோழிகளின் உயிரிழப்பு குறித்து கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் மூலம் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பாதிக்கப்பட்ட பண்ணைகளில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
நாமக்கல் கோழி நோய் ஆராய்ச்சி ஆய்வகத்தின் அறிக்கையின்படி, Low Pathogenic Avian Influenza (LPAI) வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தீவனத்தில் நச்சுப் பொருட்கள் உள்ளனவா என்பது குறித்த ஆய்வு முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிர நோய்க் கண்காணிப்பு, உயிரிழந்த கோழிகளை உரிய பாதுகாப்பு நடைமுறைகளின்படி அகற்றுதல், பண்ணைகளில் கிருமிநாசினி தெளித்தல் மற்றும் உயிரிப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோழிப்பண்ணை உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதோடு, கோழி உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்தி நோய் பரவலைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கால்நடை பராமரிப்புத் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
பொதுமக்களும், கோழிப்பண்ணை உரிமையாளர்களும் அச்சமடையாமல், துறை வழங்கும் முன்னெச்சரிக்கை அறிவுரைகளைப் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அமைச்சர் கமலி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




