--- --:--:-- --

வெற்றி பள்ளிகள் – பெயர் மாற்றப்பட்ட அரசு மாதிரிப் பள்ளிகள்

1

தமிழ்நாட்டில் கடந்த திமுக ஆட்சியில் 2021 – 2022ஆம் கல்வி ஆண்டில் மாதிரிப் பள்ளிகள் திட்டம் தொடங்கப்பட்டது. மாணவர்களுக்கான தரமான கல்வி, உணவு மற்றும் உறைவிடம் அனைத்தும் உள்ளடக்கிய இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களுக்கும் தலா ஒரு மாதிரிப் பள்ளியை அரசு தொடங்கியது.

 

 

தமிழ்நாடு அரசு மாதிரிப் பள்ளிகளில் மாணவர்களுக்கான ஸ்மார்ட் வகுப்பறைகள், டிஜிட்டல் தொழில்நுட்ப வசதி, கணினி மற்றும் இணையதள வசதி, அனைத்து உபகரணங்களுடன் கூடிய ஆய்வகங்கள், நுண்கலைத்திறன் பயிற்சி, விளையாட்டு மைதானம், உணவு மற்றும் தங்குமிடம் என அனைத்தும் கொண்ட மாதிரிப் பள்ளிகளை கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு செயல்பட்டுவருகின்றன.

 

 

இதுமட்டுமின்றி அரசு மாதிரிப் பள்ளிகளில் ஐஐடி, என்.ஐ.டி. உள்ளிட்ட முதன்மையான உயர்கல்வி நிறுவனங்கள் சேர்க்கை பெற நுழைவுத் தேர்வு பயிற்சி, நீட் பயிற்சி உள்ளிட்ட உயர்கல்வி வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுவருகின்றன.இந்நிலையில் தற்போது அரசு மாதிரிப் பள்ளிகளின் பெயரை வெற்றி பள்ளிகள் என மாற்றம் செய்து தமிழ்நாடு மாதிரி பள்ளிகளின் உறுப்பினர் செயலர் சுதன் அறிவித்துள்ளார். தவெக அரசு அமைந்த பிறகு, பல திட்டங்களில் வெற்றி என்ற பெயர் சேர்க்கப்படுகிறது. அந்த வரிசையில், தற்போது மாதிரி பள்ளிகள், வெற்றி பள்ளிகள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon