--- --:--:-- --

இறந்த முதியவரின் உடலை அடக்கம் செய்ய சைக்கிளில் எடுத்து சென்ற அவல நிலை..!

4

கர்நாடக மாநிலம் பாலக்காடு அருகே அவசர ஊர்தி வழங்கப்படாததால் உயிரிழந்த முதியவரின் சடலத்தை சைக்கிளில் எடுத்துச் சென்று அடக்கம் செய்த அவலம் அரங்கேறி உள்ளது. எம்‌கேஹுப்லி என்ற கிராமத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 70 வயது முதியவர் நேற்று காலை உயிரிழந்துள்ளார்.

 

அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று அச்சம் தெரிவித்த உறவினர்கள் இறந்தவருக்கு கொரொனா பரிசோதனை செய்ததுடன் அவரது உடலை அடக்கம் செய்வதற்காக அவசர உதவி வழங்க வேண்டும் என்று சுகாதார துறையிடம் கோரிக்கை வைத்தனர்.

 

ஆனால் மாலை 3 மணி வரை சடலத்தைக் கொண்டு செல்வதற்காக ஆம்புலன்ஸ் வழங்கப்படாததால் இறந்தவரின் உடலை உறவினர்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சைக்கிளிலேயே எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.

 

கர்நாடகாவில் போதுமான அளவு ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார். இருப்பினும் நோயாளிகளை மருத்துவமனைக்கு எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வாகனங்கள் கிடைக்காத அவல நிலையை அங்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.

 

இதற்கு கர்நாடக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon