--- --:--:-- --

சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி..! தானும் ஒரு தொகுதியில் களம் காணப் போவதாக சீமான் அறிவிப்பு!!

22

ரும் 2021 சட்டசபை பொதுத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும், தானும் போட்டியிடப் போவதாகவும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

 

கடந்த 2010-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியை நடிகரும் இயக்கு ஒரு மான சீமான் தொடங்கினார்.முதன் முதலாக 2016 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி முதன் முதலில் தேர்தல் களம் கண்டது. 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு இளைஞர்களின் ஆதரவு ஓரளவுக்கு கிட்டியது. தேர்தலில் 50% இடஒதுக்கீடு என அறிவித்து பாதி இடங்களில் பெண் வேட்பாளர்களை சீமான் களமிறக்கினார். அந்தத் தேர்தலில் ஒட்டு மொத்தமாக 1.7 சதவிகித வாக்குகளைப பெற்றது நாம் தமிழர் கட்சி .

 

அதன் பின் 2019-ல் நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தல், 19 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தனித்தே களமிறங்கிய சீமான் கட்சிக்கு மேலும் வாக்கு சதவீதம் அதிகரித்தது. அடுத்தபடியாக 2021-ல் நடைபெற உள்ள சட்டப் பேரவை பொதுத் தேர்தலிலும் களம் காண தீவிரம் காட்டி வருகிறார். இந்தத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டி எனவும் சீமான் அறிவித்துள்ளார்.

 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் அவரவர் வீடுகளின் முன் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் சென்னையில் தனது வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்டார். கருப்புக்கொடியுடன் சீமான் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டார்.

 

ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில், இந்தி, இந்தியா என்ற கட்டமைப்பிற்காக மத்திய பாஜக அரசு, பள்ளிகளில் இந்தித் திணிப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்தி, சமஸ்கிருதத்தை படிக்கச் சொல்பவர்கள் இந்தியைப் போல் தமிழையும் நாடெங்கும் படிக்க சொல்வார்களா? தமிழை படிக்கச் சொல்ல மறுப்பது ஏன்? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

 

மேலும் 2021 சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்றும் தானும் ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் சீமான் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Right Menu Icon