எஸ்பிபி உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக கூறும் மருத்துவமனை நிர்வாகம்..!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
அவருக்கு கொரொனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் எஸ் பி பாலசுப்ரமணியம் சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
தற்போது அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் இருப்பதாகவும் செயற்கை சுவாசத்தின் அளவு குறைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தனியறைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அவரிடம் கண்ணசைவு இருந்ததாகவும் தெரிகிறது.
எஸ் பி பாலசுப்ரமணியம் சேர்க்கப்பட்டிருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் விஜயபாஸ்கர் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். இதனிடையே தனது தந்தை விரைவில் குணமடைந்து வருவதாக எஸ்பிபி சரண் வீடியோவை வெளியிட்டுள்ளார்.






