--- --:--:-- --

அவிநாசி மஸ்ஜித் நூருல் யக்கீம் பள்ளிவாசலில் 74 வது சுதந்திர தின விழா

14

திருப்பூர் அடுத்துள்ள அவிநாசி புது பஸ்நிலையம் அருகே மங்கலம் ரோட்டில் உள்ள மஸ்ஜித் நூருல் யக்கீம் பள்ளிவாசலில் 74 வது சுதந்திர தின விழா பள்ளிவாசல் வளாகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மஸ்ஜித் நூருல் யக்கீம் பள்ளிவாசல் தலைவர் ஏ.எம்.இஸ்மாயில் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

 

பள்ளிவாசல் செயலாளர் முஹம்மது சித்திக் , பொருளாளர் முஹம்மது தாவூத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  பள்ளிவாசல் ஹஜ்ரத் மன்சூர் அலி இம்தாதி சுதந்திர தின பேருரையில் முஸ்லிம்களின் பங்கு மற்றும் அவர்கள் செய்த தியாகங்கள் குறித்து விளக்கி பேசினார்.

விழாவில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சட்டமன்ற தொகுதி தலைவர் முஸ்தபா, 15 வது வார்டு தலைவர் அப்துல் மஜீத், காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி சட்டமன்ற தொகுதி பொது செயலாளர் சதாம் ஹுசைன், தி.மு.க வின் நகர சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் பரக்கத் அலி உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon