3 ஆண்களை திருமணம் செய்து அவர்கள் மீது பொய் வரதட்சணை புகார் கூறி மோசடியில் ஈடுபட்ட பெண்…!
தெலுங்கானாவில் வேண்டும் என்றே அடுத்தடுத்து திருமணம் செய்துகொண்டு வரதட்சணை கேட்டு மிரட்டுவதாகபெண் ஒருவர் மூன்று பேரிடம் லட்சக்கணக்கில் பணத்தைக் கரந்து ருசிகரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் மல்லூர் பகுதியை சேர்ந்த ரவளி என்பவர் தான் நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளர்.
இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு வண்ணாரம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் மூன்று மாதத்திலேயே வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் மூலம் மூன்று லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு சுரேசை இந்த பெண் விவாகரத்து செய்தார். அடுத்ததாக மல்லாரா மண்டலம் கொய்யுர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் என்பவரை திருமணம் செய்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு அதே பாணியில் 3 லட்சம் ரூபாயை போலீசார் மூலம் ரவளி பெற்றுள்ளார்.
அத்துடன் விடாமல் மூன்றாவதாக மணக்குளூரை சேர்ந்த சுரேஷ் என்பவரை ஏமாற்றி திருமணம் செய்து அவர் மீதும் வரதட்சணை புகார் கூறினார். தனக்கு நியாயம் கோரி தண்ணீர் டேங்க்கின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமாதானம் பேசி கீழே இறங்க செய்து நடைபெற்ற விசாரணையில் இது போன்று 3 பேரிடம் பணத்தை பெற்று இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.






