ஆந்திராவில் கொரொனாவால் உயிரிழந்த உடலை சைக்கிள் ரிக்ஷாவில் கொண்டு சென்று அடக்கம்..!
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கொரொனா நோயாளியின் உடலை இடுகாட்டிற்கு சைக்கிள் ரிக்ஷாவில் கொண்டு சென்று அவலம் நடந்துள்ளது. குண்டூர் மாவட்டத்தில் ஒரு பகுதியை சேர்ந்த 68 வயது முதியவர் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்காக நேற்று காலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு கொரொனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லாமல் இறுதி சடங்கு நடத்த குடும்பத்தார் முடிவு செய்தனர்.
அவரது உடலை எடுத்துச் செல்ல மருத்துவமனை சார்பில் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அவரது குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல் சைக்கிள் ரிக்ஷாவில் இடுகாட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
ஆனால் உடலை சைக்கிள் ரிக்ஷாவில் கொண்டு செல்வது என்ற முடிவை அந்த குடும்பத்தினரை எடுத்துள்ளனர் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.






