டிரம்பின் தலைமுடிக்கு என்ன ஆச்சு..! தண்ணீர் இல்லை எனக்கூறும் டிரம்ப்..!
டிரம்பின் தலைமுடி காரணமாக குளியலறை விதி ஒன்றை மாற்றுவதற்கு முடிவு செய்திருக்கிறது அமெரிக்கா. அமெரிக்க அதிபர் டிரம்ப் கலகலப்பாக பேசுவா. ட்விட்டரில் அதிரடியாக பதிவிடுவார். கடந்த மாதம் ஒரு மாறுபட்ட குற்றச்சாட்டை முன்வைத்தார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தனது தலைமுடியை கச்சிதமாக பராமரிக்கும் வகையில் குளியலறையில் நீர் கொட்டுவது இல்லை என்றும் கூறினார். விரல் நுனியில் அணுகுண்டுகளை வீசும் ஆற்றல் படைத்த அமெரிக்க அதிபரின் குளியல் அறையில் எப்படி தண்ணீர் வரவில்லை என்று நம்முள் சிந்தனை எழக்கூடும்.
ஆனாலும் அவரது புகார் உண்மைதான். அமெரிக்க அரசின் விதிகளின்படி குளியலறையில் அதிகபட்சமாக நிமிடத்திற்கு 9 லிட்டர் நீர் கொட்டும் வகையிலேயே இருக்க வேண்டும். தனது தலை முடிக்கு இது போதுமானதாக இல்லை என்கிறார் டிரம்ப்.
டிரம்ப்பின் புகாரை தொடர்ந்து ஷவரில் கூடுதலாக நீர் கொட்டும் வகையில் விதிகளை மாற்றுவதற்கு அவரது நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதிபர் தானே கேட்டதை செய்துவிடலாம் என்று அனைவரும் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. சூழல் ஆர்வலர்கள், குளியலறையை திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
தற்போது இருக்கும் விதிகளின்படியே நல்ல குளியலறை ஷவரை வாங்குவதற்கு உதவப் போவதாக வும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாட போவதாகவும் எச்சரித்திருக்கிறார்கள். அதனால் இப்போதைக்கு டிரம்பின் தலை முடி கேட்கும் அளவுக்கு தண்ணீர் கிடைக்காது போல் உள்ளது.






