பாகிஸ்தானும், சவுதி அரேபியாவும் மோதல்..! 300 கோடி டாலர் கடனுதவி வழங்கப்பட மாட்டாது..!
பாகிஸ்தானுக்கு கடன் மற்றும் கச்சா எண்ணெய் வழங்கப்படாது என்று சவுதி அரேபியா அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவை இந்திய அணிக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமிய கூட்டமைப்பின் நாடுகளின் ஆதரவைப் பெறும் பாகிஸ்தானின் முயற்சி தோல்வியடைந்தது.
இதையடுத்து சவுதி அரேபியாவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது கருத்து தெரிவித்திருந்தார்.
அதன் எதிரொலியாக பாகிஸ்தானுக்கு வழங்குவதாக அறிவித்த 300 கோடி டாலர் கடனுதவி மற்றும் 320 கோடி டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்துவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
ஏற்கனவே அளித்த 100 கோடி டாலரையும் திருப்பி அளிக்க வேண்டிய நிலை பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கிடையேயான பல ஆண்டு கால நட்புறவு முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






