--- --:--:-- --

உலகின் முதல் நாடாக கொரோனா தடுப்பூசியை கண்டு பிடித்ததாக ரஷ்யா அறிவிப்பு…! தமது மகளுக்கு முதல் ஊசி செலுத்தப்பட்டதாக அதிபர் புதின் பெருமிதம்!!

putin-m

Russia's President Vladimir Putin chairs a meeting on preparations for the 2018 FIFA World Cup in Moscow, Russia October 3, 2017. Sputnik/Alexei Nikolsky/Kremlin via REUTERS ATTENTION EDITORS - THIS IMAGE WAS PROVIDED BY A THIRD PARTY.

கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்த முதல் நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றுள்ளது.தமது மகளுக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டு சோதனை வெற்றிகரமாக நடந்த தாக அந்நாட்டு அதிபர் புதின் பெருமையாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

உலகை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி, லட்சக்கணக்கில் உயிர்ப்பலி வாங்கி, ஒட்டு மொத்த உலகின் பொருளாதாரத்தையும் புரட்டிப் போட்டுள்ளது ஆட்கொல்லி கொரோனா வைரஸ்.இந்த வைரஸ் தொற்றால் உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் கதி கலங்கி உள்ளன.

 

சீனாவில் தோன்றி உலகை 8 மாதங்களாக ஆட்டிப் படைக்கும் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 2 கோடியை தாண்டி விட்டது. உயிரிழப்பும் 7.5 லட்சத்தை கடந்து விட்டது. உலக சுகாதார மையம் கணித்ததை விட கொரோனாவின் தாக்கம் மிகவும் அதிகமாகவே உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று புதுவிதமான வைரஸ் என்பதால் அதற்கு மருந்து கண்டு பிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு முன்னேறிய நாடுகளும் போட்டி போட்டு தீவிரமாக ஆராய்ச்சியில் இறங்கின. இந்தியாவின் பயோடெக் நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்களும் கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டு பிடிக்கும் முயற்சி வெற்றி பெற்றதாக அறிவித்தாலும், முழுமையான சோதனை முடிவடையவில்லை.

 

இதே போன்றே பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக கூறினாலும், பல கட்ட சோதனைகள் முடிந்து பயன்பாட்டுக்கு வர சில மாதங்கள் ஆகும் எனக் கூறி வருகின்றன.

சோதனை வெற்றி…ரஷ்ய அதிபர் புதின் 

இந்நிலையில், உலகிலேயே முதல் நாடாக தமது நாட்டில் கொரோனா வைரஸ் நோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடித்து சோதனையும் வெற்றி பெற்றுள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.தமது மகளுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டு சோதனை வெற்றி பெற்றதாக புதின் அறிவித்துள்ளார்.

 

கொரோனாவுக்கான மேம்படுத்தப்பட்ட தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ள அதிபர் புதின், கொரோனா தடுப்பூசியை பதிவு செய்த முதல் நாடு ரஷ்யா என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

 

மாஸ்கோவில் உள்ள ஹேமாலயா இன்ஸ்டிடியுட் மற்றும் ரஷ்ய ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசி, செப்டம்பர் மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் ரஷ்யா அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon