--- --:--:-- --

தனிப்படை அமைத்த சில நாட்களிலேயே கோவையை கலக்கி வந்த டவுசர் கொள்ளையர்களில் ஒருவனை அலேக்காக தூக்கிய காவல் துறையினர்.பொதுமக்கள் பாராட்டு !!!

தனிப்படை அமைத்த சில நாட்களிலேயே கோவையை கலக்கி வந்த டவுசர் கொள்ளையர்களில் ஒருவனை அலேக்காக தூக்கிய காவல் துறையினர்.பொதுமக்கள் பாராட்டு !!!

கோவை மாநகரில் டவுசர் கொள்ளையர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பல்வேறு பகுதிகளில் திருட சென்று அங்குள்ள பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளனர். இந்த நிலையில் பல்வேறு வீடுகளில் கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சிகளில் இவர்களின் முகங்கள் சரியான முறையில் பதிவாகாமல் உள்ளது.மேலும், இவர்களின் உடலில் டவுசரை தவிர வேறு எந்த அடையாளமும் இல்லாமல் முகத்தில் துணியால் முடிய நிலையில் இருந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து வந்தனர்.

இந்த நிலையில் டவுசர் கொள்ளையர்களின் அட்டகாசத்தை பொறுத்து கொள்ள முடியாத நிலையில் அவர்களை பிடிக்க காவல் துறையினர் தற்போது தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

 

மேலும்,தனிப்படை மூலமாக விரைவில் இந்த டவுசர் கொள்ளையர்கள் காவல் துறையினரிடம் சிக்கிவிடுவார்கள் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

காவல் துறை தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்த நிலையில் நீலகிரி மாவட்டம் பந்தலூரை சேர்ந்த வீரமணி என்பவரை தனிப்படையினர் தேடுதல் வேட்டை பணியின் போது சிங்காநல்லூர் பகுதியில் உள்ள எஸ். ஐ. எச். எஸ் காலனியில் வைத்து கைது செய்துள்ளனர்.

 

மேலும்,இது குறித்து வீரமணியின் கூட்டாளிகளை பற்றியும், இவர்களின் கொள்ளை குறித்தும் சிங்காநல்லூர் காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.கைது செய்யப்பட்ட வீரமணி ஏற்கனவே 3 கொள்ளை வழக்குகள் உள்ளன என்பதை காவல் துறையினரின் தீவிர விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

மேலும்,இவருடன் சேர்ந்த கூட்டாளிகளின் விவரங்கள் விசாரணையில் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தனிப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

தனிப்படை அமைத்த ஓரிரு நாட்களில் டவுசர் கொள்ளையர்களை கண்டுபிடித்த காவல்துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருவதுடன் டவுசர் கொள்ளையர்களின் அட்டகாசம் இனி இல்லை என்று நிம்மதியடைந்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon