--- --:--:-- --

கோவையில் தொடரும் டவுசர் கொள்ளையர்களின் அட்டகாசம். திருடர்களை பிடிக்க தனிப்படைகளை அமைத்த காவல் துறையினர் !!!

18

கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக டவுசர் கொள்ளையர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பல்வேறு பகுதிகளில் திருட சென்று அங்குள்ள பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் பல்வேறு வீடுகளில் கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சிகளில் இவர்களின் முகங்கள் சரியான முறையில் பதிவாகாமல் உள்ளது.

 

இந்த நிலையில் இவர்களின் உடலில் டவுசரை தவிர வேறு எந்த அடையாளமும் இல்லாமல் முகத்தில் துணியால் முடிய நிலையில் இருந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து வந்தனர்.

 

இந்த நிலையில் டவுசர் கொள்ளையர்களின் அட்டகாசத்தை பொறுத்து கொள்ள முடியாத நிலையில் அவர்களை பிடிக்க காவல் துறையினர் தற்போது தனிப்படை அமைத்துள்ளனர், இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்,தனிப்படை மூலமாக விரைவில் இந்த டவுசர் கொள்ளையர்கள் காவல் துறையினரிடம் சிக்கிவிடுவார்கள் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

பொதுமக்களை அச்சபடுத்தி வந்த டவுசர் கொள்ளையர்களை பிடிக்க காவல் துறையினர் தனிப்படை அமைத்து பொதுமக்களிடையே வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon