--- --:--:-- --

கலைஞர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி முன்னிட்டு தி.மு.க.வினர் சுகாதாரப் பணியாளர்களை கௌரவித்து நிவாரணம்

23

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை திமுக ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் ஒன்றிய பெருந்தலைவர் முகமது முக்தார் முன்னிலையில் முன்னாள் முதல்வர் திமுக கட்சியின் தலைவர் கருணாநிதி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தினார்கள். முன்னதாக கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

 

அதனை தொடர்ந்து திருவாடானை துப்புரவு பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக அனைவருக்கும் பொன்னாடை போற்றி உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்கள். மேலும் 30க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியருக்கு பள்ளிக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர். துப்புறவு பணியாளர்களை தி.மு.க வினர் பொன்னாடை போற்றி கௌரவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.இந்த நிகழ்வில் தோழமைக் கட்சியை சேர்ந்த காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மதிமுக உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon