--- --:--:-- --

சுரங்க தொழிலாளிக்கு அடித்த லக்..! ஒரே இரவில் கோடீஸ்வரரான அதிசயம்..!

12

த்திய பிரதேசத்தில் சுரங்கத் தொழிலாளி ஒருவர் 3 வைர கற்களை எடுத்ததன் மூலம் ஒரே இரவில் கோடீஸ்வரராக உயர்ந்துள்ளார். பண்ணா மாவட்டத்திலுள்ள ஆழமற்ற சுரங்கம் ஒன்றில் சுபால் என்ற தொழிலாளி ஒருவர் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

 

அப்போது ஏழரை கேரட் மதிப்பிலான 3 வைரக்கற்களை அந்த தொழிலாளி கண்டெடுத்தார். அதனை அடுத்து அந்த வைரக் கற்களை சுரங்க அதிகாரிகளிடம் சுபால் ஒப்படைத்தார்.

 

இந்த வைர கற்கள் ஒவ்வொன்றும் 30 முதல் 35 லட்சம் வரை மதிப்புடையவை என்றும், அவை அரசு விதிப்படி ஏலம் விடப்பட்டு பின்னர் 12 சதவீதம் வரி பிடித்தம் போக மீதி 88 சதவீத தொகை அந்த தொழிலாளியிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon