முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு..!
முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நான்காவது நாளாக கனமழை தொடர்வதால் அணையின் நீர்மட்டம் 130 அடியாக அதிகரித்துள்ளது. அணை நீர்பிடிப்பு பகுதிகளான இடுக்கி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நான்காவது நாளாக கனமழை தொடர்கிறது.
இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி அதிகரித்து 130 அடியாக உயர்ந்துள்ளது. தற்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6956 கன அடியிலிருந்து 17 ஆயிரத்து 746 கனஅடியாக அதிகரித்துள்ளது. எனவே குடிநீருக்காக அணையிலிருந்து நீர் திறப்பு வினாடிக்கு ஆயிரத்து 200 கன அடியிலிருந்து ஆயிரத்து 650 கனஅடியாக உயர்ந்துள்ளது.







