இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட பாகிஸ்தானுக்கு உரிமை இல்லை..! பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை..!
இந்தியாவில் மத ரீதியான மோதலை தூண்டிவிடும் வகையில் செயல்பட வேண்டும் என பாகிஸ்தானை இந்தியா எச்சரித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை எதிர்த்து பாகிஸ்தான் கருத்து தெரிவித்திருந்த நிலையில் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் இதனை கண்டித்துள்ளார். இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட பாகிஸ்தானுக்கு உரிமை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தை தூண்டிவிடும் நாடு இதுபோன்ற சொல்வது ஆச்சரியம் இல்லை என்றும் எனவே இதுபோன்ற அவர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் தரத் தேவையில்லை என தெரிவித்த செய்தி தொடர்பாளர் அங்கு சிறுபான்மையினர் நலன் முதலில் பாதுகாக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.







