உறவினரற்ற கொரொனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை புதைக்கும் தனியார் வங்கி மேலாளர்..!
சென்னையில் கொரொனா தொற்றால் உயிரிழந்த நூற்றுக்கும் அதிகமானோரை நல்லடக்கம் செய்த தனியார் வங்கி மேலாளருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
திருவல்லிக்கேணியை சேர்ந்த தனியார் வங்கி மேலாளர் ஆன ஜின்னா ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற நோயாளிகளுக்கு உணவு பொருட்கள் தருவது உறவினர்கள் யாருமற்று சடலங்களை உறவுகள் எனும் தன்னார்வ அமைப்புடன் இணைந்து அடக்கம் செய்வது உள்ளிட்ட சமூக சேவைகளை செய்து வருகிறார்.
பல்வேறு மருத்துவமனைகளில் கொரொனா தொற்றால் உயிரிழந்த 130 நபர்களை அவரவர் மத வழக்கப்படி அடக்கம் செய்துள்ள இவரது சேவையை பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ள நிலையில் இந்த சேவை மனநிறைவைத் தருவதாக அவர் தெரிவித்துள்ளார்.







