--- --:--:-- --

குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து..!

5

குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற பார்வை மாற்றுத்திறனாளிகள் இருவர் உட்பட தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் பார்வை மாற்று திறனாளிகளின் மதுரையை சேர்ந்த பூரண சுந்தரி, சென்னையை சேர்ந்த நாகேந்திரன் ஆகிய இருவரும் குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றதை அறிந்து மகிழ்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

 

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்ற திருவள்ளுவரின் வரிகளைச் சுட்டிக்காட்டி இருவரின் மன உறுதியும் விடாமுயற்சியும் தான் அவர்களின் வெற்றிக்கு வித்திட்ட தாக அவர் தெரிவித்துள்ளார்.

 

இருவரின் வெற்றி சாதனை படைக்க விரும்பும் அனைவருக்கும் ஒரு முன் உதாரணமாகத் திகழும் என்பதில் ஐயம் இல்லை எனவும் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் மக்கள் நலம் மேம்படும் வகையில் பணிகளை ஆற்றிட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Leave a Reply

Right Menu Icon