--- --:--:-- --

முல்லைக்கு தேர் கொடுத்த பாரி போல சிறிய பறவைக்காக காரை கொடுத்த இளவரசர்..!

6

முல்லைக்கு தேர் கொடுத்த பாரி போல பறவை கூடுகட்டி வாழ தனது காரை கொடுத்த துபாய் பட்டத்து இளவரசருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அந்நாட்டு பட்டத்து இளவரசராகவும் நிர்வாக கவுன்சில் தலைவராக இருப்பவர் ஷேக் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம்.

 

மற்ற உயிரினங்கள் மீது அன்பு பாராட்டி வரும் ராஷித் விலங்கியல் பூங்காவில் ஏராளமான விலங்குகளை தத்தெடுத்துள்ளார். இந்த நிலையில் கொரொனா பாதிப்பு காரணமாக இவர் தனது காரை ஓரமாக நிறுத்தி வைத்திருந்தார். அந்த காரின் முகப்பு பகுதியில் சிறிய பறவை ஒன்று கூடு கட்டி முட்டையிட்டு அடை காத்து வருகிறது.

 

இதனை கண்ட ராஷீத் குறிப்பிட்ட காரை பயன்படுத்தாமல் விட்டு விட்டார். ஒரு சிறு பறவைக்காக தனது காரையே அளித்த இளவரசரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

 

Leave a Reply

Right Menu Icon