--- --:--:-- --

சுஷாந்த் சிங் காதலி ரியா நாளை நேரில் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு..!

3

டிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் நாளை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அவரது காதல் சக்கரவர்த்திக்கு அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்தி திரை உலகில் வேகமாக வளர்ந்து வந்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி அவரது இல்லத்தில் சடலமாக கிடந்தார்.

 

சடலத்தை கைப்பற்றி 50க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்திய மும்பை காவல்துறையினர் மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிவித்தனர். அதேசமயம் சுஷாந்த் சிங் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் பீகார் காவல் துறையினர் கடந்த வாரம் அவரது காதலி ரியா சக்கரவர்த்தி மீது வழக்கு பதிவு செய்தனர்.

 

சுஷாந்த் சிங் கணக்கில் இருந்து 15 கோடி ரூபாய் மாயமானதாகவும் அந்த பணத்தை ரியா தனது வங்கி கணக்கிற்கு மாற்றி இருப்பதாகவும் இதனால் மன உளைச்சல் அடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் அவரது தந்தை புகார் அளித்திருந்தார்.

 

இந்த சூழலில் சுஷாந்த் மரணத்திற்கு சட்டவிரோத பணபரிமாற்றம் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கும் அமலாக்கத்துறை அது குறித்து விசாரிப்பதற்காக வரும் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகும்படி ரியா சக்கரவர்த்திக்கு உத்தரவிட்டுள்ளனர்.

 

மும்பை காவல்துறை. அமலாக்கத்துறை அதைத் தொடர்ந்து தற்போது சிபிஐ என மூன்று விசாரணை முகமைகள் சுஷாந்த் வழக்கை விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon