--- --:--:-- --

குஜராத்தில் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: கொரோனா நோயாளிகள் 8 பேர் உயிரிழந்த சோகம்!!

2.1

குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 8 கொரோனா நோயாளிகள் மூச்சுத் திணறி உயிரிழந்த நிலையில், 35 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

 

அகமதாபாத்தின் நவுரங்பூராவில் உள்ள ஸ்ரே என்ற பிரபல மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு பிரத்யேக சிகிச்சை வழங்கப்படுகிறது. இங்கு 40-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்தனர். அதற்குள் ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்த 8 கொரோனா நோயாளிகள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

 

மீட்புக்குழுவினரால் 35-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அவசர, அவசரமாக மீட்கப்பட்டு அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கொடிய கொரோனா கொடுமைக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் தீயின் கோரப்பசிக்கு பலியான சம்பவம் குஜராத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை.

Leave a Reply

Right Menu Icon