--- --:--:-- --

காதல் திருமணமாகி 2 மாதத்தில் வரதட்சணை கேட்டு மனைவியை தீ வைத்து கொளுத்திய கணவன்..!

2

ரதட்சணை கேட்டு காதல் மனைவியை தீவைத்து கொள்ள முயன்ற கணவனை விழுப்புரம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.உடல் முழுவதும் தீயில் கருகி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் இவர் ராஜேஸ்வரி. திருமணம் ஆகி இரண்டு மாதம் தான் ஆகிறது. அதுவும் காதல் திருமணம்.

 

மண வாழ்க்கையில் மன மகிழ்வோடு வாழ வேண்டிய ராஜேஸ்வரி மரணப்படுக்கையில் இருப்பதற்கு காரணம் அவரின் காதல் கணவன் ஜீவா தான். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ஜீவாவும் நயினார் பாளையத்தை சேர்ந்த ராஜேஸ்வரியும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

 

எதிர்ப்பையும் மீறி கடலூர் ஜூன் மூன்றாம் தேதி ராஜேஸ்வரியை கரம்பிடித்தார். ஜீவா பெண் வீட்டாரின் சம்மதம் இன்றி திருமணம் நடந்ததால் ராஜேஸ்வரியின் பெற்றோர் வரதட்சணை எதுவும் தரவில்லை என கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஜீவா வரதட்சணை வாங்கி வரச்சொல்லி பிரச்சனை செய்து வந்துள்ளார்.

 

பணத்தால் ஏற்பட்ட பிளவு இருவரையும் காதலில் கசப்பை ஏற்படுத்திவிட்டது. காலம் முழுவதும் துணை நிற்பான் என நம்பி சென்ற கணவன் காசு கேட்டு தொல்லை செய்வதை ஏற்க முடியாத ராஜேஸ்வரி செய்வதறியாமல் தவித்து வந்திருக்கிறார். வேதனையில் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க கடந்த மூன்றாம் தேதி இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

 

கோபம் தலைக்கு ஏறியதால் தன் நிலை மறந்த ஜீவா தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்ததாக மரண சாட்சியம் அளித்திருக்கிறார் ராஜேஸ்வரி. ராஜேஸ்வரியை கொல்லத் துணிந்துதோடு மட்டுமின்றி உண்மையை வெளியே சொன்னால் அவரின் குடும்பத்தையும் கொன்று விடுவதாக கூறி மிரட்டி இருக்கிறார் ஜீவா.

 

80 சதவீத தீக்காயங்களுடன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ராஜேஸ்வரி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். ஜீவாவை கைது செய்த காவல்துறையினர் நடந்த சம்பவம் குறித்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon