விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் நிச்சயம் திரையரங்கில் தான் வெளியிடப்படும்..!
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் நிச்சயம் திரையரங்கில் தான் வெளியிடப்படும் என விஜய்யின் செய்தித்தொடர்பாளர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். முன்னதாக அமேசான் பிரைமின் ட்விட்டர் பக்கத்தில் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் படங்களின் பட்டியலில் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியீட்டாக மாஸ்டர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் மாஸ்டர் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள விஜய்யின் செய்தி தொடர்பாளர் மாஸ்டர் திரையரங்கில் தான் வெளியிடப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.






