--- --:--:-- --

பெண்ணுக்கு பேய் விரட்டுவதாக கூறி அடித்து துன்புறுத்தியதில் பெண் உயிரிழப்பு..!

10

தெலுங்கானாவில் பேய் பிடித்திருப்பதாக கூறி மந்திரவாதிகளால் தாக்கப்பட்ட இளம் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கரிம்நகர் மாவட்டத்தை சேர்ந்த ரஜிதா என்ற அந்தப் பெண் மல்லேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

 

இரண்டு மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்த நிலையில் ரஜிதாக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு பேய் பிடித்திருப்பதாக நினைத்த மல்லேஷ் உள்ளூர் மந்திரவாதி சியாம் என்பவரை அழைத்து வந்துள்ளார். அவர் பேய் ஓட்டுவதாக கூறி பெண்ணின் தலை முடியைப் பிடித்து கன்னத்தில் அறைந்தது கடுமையாக தாக்கியுள்ளார்.

 

அப்போது கட்டிலில் தலை இடித்ததில் மயங்கிய ரஜிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மந்திரவாதி ஷியாம், ஒருவரை கைது செய்த போலீசார் தலைமறைவான கணவரையும் அவரது பெற்றோரையும் தேடி வருகிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon