--- --:--:-- --

பப்ஜி கேம் விளையாடிய சிறுவன் மாரடைப்பால் உயிரிழப்பு..!

8

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் நீண்ட நேரம் செல்போனில் பப்ஜி கேம் விளையாடிய பிளஸ் 2 மாணவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெட்டப்பாளையம் மண்டலம் சைனேத்த புரி என்ற கிராமத்தை சேர்ந்த 18 வயதான முரளி என்ற மாணவர் பள்ளி மூடப்பட்டு உள்ளதால் வீட்டில் எந்த நேரமும் தனிமையில் பப்ஜி கேம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.

 

இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்த அவரை சிராலா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முரளி முழுநேர பப்ஜி விளையாட்டால் மன அழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon