--- --:--:-- --

காஷ்மீர், லடாக் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து பாகிஸ்தான் வெளியிட்டுள்ள வரைபடத்தால் சர்ச்சை..!

7

காஷ்மீர் லடாக் மற்றும் குஜராத்தின் சில பகுதிகளை சேர்த்து முட்டாள்தனமான புதிய வரைபடத்தை பாகிஸ்தான் வெளியிட்டு இருப்பதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

இது அரசியல் அபத்தமானது, சர்வதேச நம்பகத்தன்மை அற்றது, பாகிஸ்தானின் பயங்கரவாத முகத்தை வெளிப்படுத்துவது என்று இந்தியா கடுமையாக விமர்சித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துக்கான 370 ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெறும் நிலையில் காஷ்மீர், லடாக் பகுதிகளை இணைத்து பாகிஸ்தானின் புதிய அரசியல் வரைபடம் என ஒன்றை அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் வெளியிட்டுள்ளார்.

 

அதில் காஷ்மீர், லடாக் மற்றும் குஜராத்தின் சில பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை பாகிஸ்தானின் செயல் அரசியல் அபத்தம் என்றும், சர்வதேச நம்பகத்தன்மையோ, சட்டப்படியான செல்லுபடியாகாது என்றும் தெரிவித்துள்ளது.

 

இது போன்ற விசித்திரமான வெளியீடுகள் மூலம் இந்திய பகுதியை ஆக்கிரமிக்கும் பாகிஸ்தானின் பேராசையும் அதற்காக அந்நாடு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுவதும் சர்வதேச அரங்கில் உறுதியாகிறது என்று வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

அண்மையில் இந்தியப் பகுதிகளைச் சேர்த்து நேபாளம் புதிய வரைபடத்தை வெளியிட்டு சர்ச்சையை ஓய்வதற்குள் பாகிஸ்தானும் இப்போது தன் பங்கிற்கு அதை செய்துள்ளது. இது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் முட்டாள்தனத்தை காட்டுவதாக தெற்காசிய அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon