--- --:--:-- --

கொரொனா நோயாளிகளை அழைத்து செல்ல வரப்பட்ட குப்பை வண்டி..!

4

ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூவரை குப்பை வண்டியில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மூட்டை முடிச்சுகளோடு வாகனம் ஒன்றில் ஏற்றிச் செல்லப்படும் இவர்கள் வேலைக்காக வெளியூர் செல்லும் கூலித் தொழிலாளர்கள் அல்ல.

 

கொரொனா நோய் பாதித்தவர்கள். ஜெராஜாபூட்டா என்ற இடத்தில் நடந்த இந்த சம்பவம் இப்போது ஆந்திராவில் அனல் வீசி வருகிறது. ஆம்புலன்சை அழைத்தால் அதற்க்கு பதிலாக குப்பை வண்டி கொண்டு வரப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரொனா நோயாளிகளை ஆம்புலன்ஸ் மூலம் மட்டுமே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

 

ஆனால் அதை கண்டுகொள்ளாத நகராட்சி அதிகாரிகள் குப்பை வண்டியில் நோயாளிகளை அழைத்து சென்றதற்கு ஆந்திர அரசுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

 

சடலமாக இருந்தாலும் மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என சட்டங்கள் இருந்தும் கொரொனா நோயாளிகளுக்கு அந்த மரியாதை கூட வழங்கப்படவில்லை என்பது வேதனை.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon