நடிகை வனிதா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு..!
பொது முடக்க காலத்தில் உரிய அனுமதி இல்லாமல் திருமண நிகழ்ச்சியில் ஆட்களை திரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் நடிகை வனிதா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகை வனிதா – பீட்டர் பால் திருமணம் போரூர் அடுத்த ஐயப்பன்தாங்கலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சமீபத்தில் நடைபெற்றது.
ஆனால் அனுமதி பெறாமலும் முக கவசம் அணியாமல் ஏராளமானோர் நிகழ்ச்சியில் கூடியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்படி நடிகை வனிதா மீது சட்டவிரோதமாக கூடுதல் அரசின் உத்தரவை மீறி நடத்தல், உயிருக்கு ஆபத்தான தொற்று நோயைப் பரப்பும் வகையில் கவனக்குறைவான செயலில் ஈடுபடுதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் போரூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






