--- --:--:-- --

ராஜஸ்தான் சட்டமன்றத்தை கூட்ட மறுப்பு தெரிவிக்கும் ஆளுநர்..!

6.1

ராஜஸ்தான் சட்டமன்றத்தை கூட்ட வேண்டிய அவசியத்திற்கு கூடுதல் காரணம் கோப்புகளை ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா திருப்பி அனுப்பிவிட்டார். வரும் வெள்ளியன்று அவையைக் கூட்டி கொரொனா தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று அரசு சார்பில் ஆளுநருக்கு கோரிக்கை விடப்பட்டது.

 

ஆனால் இதனை ஏற்க மறுத்த ஆளுநர் சட்டமன்ற விவகாரங்கள் துறையிடம் கூடுதல் விவரங்கள் கேட்டுள்ளார். இதனால் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கியதால் அவையில் தமது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அசோக் உள்ளார். சச்சின் பைலட், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக முடிவு கிடைக்கவில்லை.

 

நோட்டீஸுக்கு எதிராக சச்சின் பைலட் தொடர்ந்த வழக்கில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் கூறிவிட்டது. இதனால் உச்சநீதிமன்றத்தை சபாநாயகர் தரப்பு அணுகியது. திடீர் திருப்பமாக சபாநாயகர் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

 

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி உத்தரவு பிறப்பிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டதே இதற்கு காரணமாக சபாநாயகர் தரப்பு கூறியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon