--- --:--:-- --

வங்க தேசத்திற்கு 10 ரயில்களை வழங்குகிறது இந்தியா..!

2

வங்கதேசம் உடனான உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக அந்நாட்டிற்கு இந்தியா இன்று 10 ரயில்களை வழங்குகிறது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு இந்தியா வந்திருந்த போது அளிக்கப்பட்ட உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் அகல பாதையில் ஓடக்கூடிய ரயில்கள் வழங்கப்படுகின்றன.

 

இதையொட்டி காணொளி வாயிலாக நடைபெறும் நிகழ்ச்சியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். வங்கதேச தரப்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் , ரயில்வே அமைச்சர் நூருல் இஸ்லாம் சுஜான் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

Leave a Reply

Right Menu Icon