--- --:--:-- --

திமுக நடத்தும் சமூக நீதிக்கான போருக்கு ஆதரவு தாருங்கள்..!

1

திமுக நடத்தும் சமூக நீதிக்கான போருக்கு ஆதரவு கோரி காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 11 கட்சிகளின் தலைவர்களுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.

 

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உள்ளிட்டோருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

 

அது சமூக நீதியை பாதுகாக்க பல நூற்றாண்டாக கணிக்கப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின சமுதாயங்களுக்கு சமத்துவத்தை உறுதி செய்யப் பாடுபடும் திமுகவின் முயற்சிக்கு ஆதரவு அளிக்குமாறு ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். உரிமையை இழந்தவர்களின் உரிமைகளுக்காகவும் இட ஒதுக்கீடு தொடர்பான அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை பாதுகாத்திடவும் குரல் கொடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon