--- --:--:-- --

முழு ஊரடங்கு நேரத்தில் மதுரையில் அண்ணன், தம்பி இருவரையும் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த சம்பவம்

முழு ஊரடங்கு நேரத்தில் மதுரையில் அண்ணன், தம்பி இருவரையும்  ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த சம்பவம்

துரை எல்லிஸ்நகர் போடி லயன் பழைய காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் வெள்ளி கண் செந்தில், முருகன் இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள். தத்தனேரி பகுதியில் உள்ள அவர்களது உறவினரின் துக்க நிகழ்ச்சி ஒன்றிற்கு இருவரும் சென்று மீண்டும் அவர்கள் குடியிருக்கும் எல்லிஸ்நகர் பகுதியில் உள்ள போடி லயன் பழைய காலனி பகுதிக்கு வரும் பொழுது பத்து பேர் கும்பல் சூழ்ந்து கொண்டு இருவரையும் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்று விட்டு தப்பி சென்று விட்டனர்.

 

இச்சம்பவம் அறிந்த எஸ்எஸ் காலனி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையின் போது இருவர் மீதும் பல்வேறு கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் என்றும், பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் லோகேஷ் ,பாலா, சிவகுமார் ஆகியோர் ஒரே கும்பத்தை சேர்த்தவர்கள் வளர்த்த மாட்டை வெள்ளிகன் செந்தில், முருகன் இருவரும் அவர்களது மாடுகளை வெட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

இரு கும்பலுக்கும் இடையே கடந்த இரண்டு வருடங்களாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில் தற்போது கஞ்சா விற்பனை செய்வதிலும் முன் பகையால் கொலை நடந்து இருக்கலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

 

மேலும் உடலை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Leave a Reply

Right Menu Icon