சிட்டுக் குருவிக்காக இருளில் வாழும் கிராமம்!!
சிட்டுக் குருவிகளுக்கு அடைக்களம் கொடுக்கும் வகையில் கிராமத்தில் தெருவிளக்கு வெளிச்சை பயன்படுத்தாமல் ஆதரவு கொடுத்த கிராம மக்களுக்கு பாராட்டு குவிகிறது.சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அருகே உள்ளது பொத்தகுடி கிராமம் இந்த கிராமத்தில் பல்வேறு தெருக்கள் உள்ளது.
இந்த ஊரின் கடையில் உள்ள போஸ்ட் கம்பம் அருகே தான் கிராமத்தின் தெருவிளக்குகளின் சுவிட்ச் உள்ளது. இந்த போர்டு குருவி ஒன்று கூடு கட்டி குஞ்சு பொறித்துள்ளது. இந்நிலையில் குருவியின் நிலையை உணர்ந்த பொதுமக்கள் கிராமம் இருளில் சூழ்ந்தாளும் பரவாயில்லை ஸ்விட்ச்சை பயன்படுத்த தெருவிளக்கு போட வேண்டாம் என முடிவு செய்து குருவிக் குஞ்சுகளை பாதுகாத்தாது நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
இது குறித்து கிராம இளைஞர் கருப்பு ராஜ்…,” என் வீட்டின் அருகே தான் தெருவிளக்கு ஸ்விட்ச் போர்டு உள்ளது. இதனை தினமும் நான் தன் ஸ்விட் போடுவேன் ஒரு நாள் அப்படி லைட் போட போகும்போது குருவி கூடு கட்டி இருந்ததை பார்த்தேன். அதற்கு தொந்தரவு இல்லாத வகையில் சில நாள் ஸ்சுவிட்ச் போட்டேன்.
பின்னர் எங்கள் கிராம வாட்சப் குழுவில் தகவலை சொல்லி தெருவிளக்கை பயன்படுத்த வேண்டும் வீடுகளில் உள்ள விளக்கை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என இளைஞர்கள் சார்பாக கேட்டோம். அனைவரும் மறுப்பு சொல்லாமல் ஆதரவு கொடுத்தனர். லைட் இல்லாட்டி பரவாயில்லை பாதுகாப்பாக இருந்துகொள்வோம் என ஆதரவு தெரிவித்தனர்.

இதனால் கிராமம் இருட்டில் மூழ்கினாலும் பரவாயில்லை என தெருவிளக்கு ஸ்விட்ச் ஒரு மாதத்திற்கு மேல் போடவில்லை. நேற்று முதல் குருவிகள் பறக்க துவங்கிவிட்டது. அதனால் நேற்று இரவு முதல் ஸ்விட்ச்களை பயன்படுத்த துவங்கிவிட்டோம். எனினும் குருவிகள் வந்து செல்வதால் அதற்கு குருவி கூடுகள் அமைக்க உள்ளோம். எங்கள் கிராமத்தில் பறவைகள் குறித்து விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்த உள்ளோம்” என்றார்.







