ஜெர்மனியில் வீட்டின் மீது விழுந்த விமானம்..!
ஜெர்மனியில் சிறிய விமானம் ஒன்று வீடு மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர். பிரெய்ன் வெஸ்ட் பாலியா மாகாணத்திலுள்ள வெசல் நகரில் இந்த விபத்து நேரிட்டு உள்ளது. இதில் 3 பேர் பலியானதாகவும் ஒரு குழந்தை காயமடைந்ததாகவும் நகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த 3 பேரில் விமானியும் ஒருவரா என்பது உறுதியாக தெரியவில்லை. விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்பு வானில் பறந்த ஹார்ட் ஆர் பலூனில் மோதியதாக அங்கிருந்தோர் தெரிவித்துள்ளனர்.







